விளையாட்டு மற்றும் கலை

விளையாட்டு கல்வியை போன்று இளமையில் முக்கியமானதாகும். தமிழ்நாட்டில் பல வகையான விளையாட்டுகள் கிராமப்புறங்களில் உண்டு. பல விளையாட்டுகள் தமிழ் மரபில் வீரம் சார்ந்தும் உண்டு. இது பிற்காலத்தில் பெண்களுக்கு தற்காப்பு முறைகளாகவும் பயன்படுகிறது. சிலம்பம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். கோயில் திருவிழாக்களும் காலை நிகழ்ச்சிகளும் கிராமிய வாழ்க்கையியல் விளையாட்டுகளை நன்கு வளர்த்து வந்தன. இவை ஊக்குவிக்கபட்டு அடுத்த தலைமுறையை சென்றடைய வேண்டும்.

பிரயா இந்த கலைகளையும் விளையாட்டுகளையும் ஊக்குவிக்க ஆர்வம் மிக்க இளம் பெண்களுக்கு ஒரு சிறிய ஊக்க தொகையினை வழங்க விரும்புகின்றது. பள்ளி பயிலும் மாணவிகள் அல்லது 16 வயதுக்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் பெண் குழந்தைகளுக்கு இந்த உதவி தொகை வழங்கப்படும்.

ஏதாவது ஒரு கிராமிய கலை அல்லது விளையாட்டில் திறமை உடையவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ள மாணவிகள் இந்த பிரயா இணையதளம் முலமாக விண்ணப்பம் அனுப்பலாம். தேர்ந்தெடுக்கப்படும் பெண் குழந்தைகள் ஒவொரு மதமும் 500 ரூபாய் உதவி தொகை பெறுவர். இந்த திட்டத்தில் தற்போது 10 பெண்கள் உதவி பெறலாம்