பெண்கள் அதிகாரம்

நவ பாரத் மகளிர் அதிகாரமளித்தல் மையத்தால் பயிற்சியளிக்கப்பட்ட பெண்கள் பனை ஓலைகள், சணல் பைகள் மற்றும் ஆடைகளால் செய்யப்பட்ட வீட்ட

பள்ளி கல்வி உதவி

கிராமப்புறங்களில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு வளர்ந்து வரும் விஞ்சான மற்றும் வலை தல அறிவு மிகவும் முக்கியமானது. இன்றைய சூழ்நிலையில் நகர்ப்புற மாணவிகளை விட கிராமப்புற மாணவிகளுக்கு இந்த வாய்ப்பு குறைவு. நல்ல படிப்பு அதில் நாட்டம் மற்றும் திறமை கொண்ட மாணவிகளை படிப்பில் ஊக்கப்படுத்தினால் அது அவர்களின் முன்னேறும் வாய்ப்பை மேம்படுத்தும். பிரயா படிப்பில் நாட்டம் கொண்ட கிராம பள்ளி மாணவிகளுக்கு ஒரு சிறிய ஊக்க தொகையினை ஒவொரு மாதமும் வழங்க முன் வந்துள்ளது. இது 10, 11, மற்றும் 12 ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு உரியது. இது படிப்பில் ஊக்கத்தையும் சிறிய அளவு பொருளாதார தற்சார்பையும் ஏற்படுத்தலாம். மேலும் படிப்பு சாரா திறமைகளை வளர்க்கவும் இந்த சிறிய உதவி பயன்படலாம்.
இந்த உதவி திட்டம் தமிழக அரசு பள்ளிகள் அல்லது பஞ்சாயத்து பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு மட்டும் உரியது. அரசு பள்ளிகள் கிராமப்புறங்களில் அமைந்து இருக்க வேண்டும். விருப்பமுள்ள மாணவிகள் இந்த பிரயா இந்த உதவி திட்டம் தமிழக அரசு பள்ளிகள் அல்லது பஞ்சாயத்து பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு மட்டும் உரியது. அரசு பள்ளிகள் கிராமப்புறங்களில் அமைந்து இருக்க வேண்டும். விருப்பமுள்ள மாணவிகள் இந்த பிரயா இணையதளம் முலமாக விண்ணப்பம் அனுப்பலாம். தேர்நதெடுக்கபடும் மாணவிகளுக்கு ஒவொரு மாதமும் 500 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும். தற்போது 20 மாணவிகள் இந்த திட்டம் முலம் உதவி பெறலாம்.

விளையாட்டு மற்றும் கலை

விளையாட்டு கல்வியை போன்று இளமையில் முக்கியமானதாகும். தமிழ்நாட்டில் பல வகையான விளையாட்டுகள் கிராமப்புறங்களில் உண்டு. பல விளையாட்டுகள் தமிழ் மரபில் வீரம் சார்ந்தும் உண்டு. இது பிற்காலத்தில் பெண்களுக்கு தற்காப்பு முறைகளாகவும் பயன்படுகிறது. சிலம்பம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். கோயில் திருவிழாக்களும் காலை நிகழ்ச்சிகளும் கிராமிய வாழ்க்கையியல் விளையாட்டுகளை நன்கு வளர்த்து வந்தன. இவை ஊக்குவிக்கபட்டு அடுத்த தலைமுறையை சென்றடைய வேண்டும். பிரயா இந்த கலைகளையும் விளையாட்டுகளையும் ஊக்குவிக்க ஆர்வம் மிக்க இளம் பெண்களுக்கு ஒரு சிறிய ஊக்க தொகையினை வழங்க விரும்புகின்றது. பள்ளி பயிலும் மாணவிகள் அல்லது 16 வயதுக்குட்பட்ட கிராமங்களில் வசிக்கும் பெண் குழந்தைகளுக்கு இந்த உதவி தொகை வழங்கப்படும். ஏதாவது ஒரு கிராமிய கலை அல்லது விளையாட்டில் திறமை உடையவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ள மாணவிகள் இந்த பிரயா இணையதளம் முலமாக விண்ணப்பம் அனுப்பலாம். தேர்ந்தெடுக்கப்படும் பெண் குழந்தைகள் ஒவொரு மதமும் 500 ரூபாய் உதவி தொகை பெறுவர். இந்த திட்டத்தில் தற்போது 10 பெண்கள் உதவி பெறலாம்

எங்களை பற்றி

பிரயா ஒரு சிறிய தொண்டு நிறுவனம். பெண் மாணவிகளின் சேவைக்காக 2017ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. நீர் நிலைகளும் சுற்று சூழலும் நம் கிராமிய வாழ்வில் பின்னி பிணைந்தவை. பெண்கள் மற்றும் சிறுமிகளின் வளர்ச்சியில் இவை இரண்டும் முக்கிய பங்கு வகிக்கின்றன. படிப்பு, விளையாட்டு சுற்று சூழல் பற்றி நன்கு அறிந்திருந்தால் வளர்ந்து வரும் பெண்களின் எதிர்கால வாழ்வை அது வளப்படுத்தலாம். பிரயாவின் நோக்கமும் திட்டங்களும் இதை சார்ந்தே உருவாக்கப்பட்டுள்ளது. பிரயா உறுப்பினர்களுக்கு நல்ல கல்வி, நல்ல குடும்ப சூழ்நிலை மற்றும் ஆன் பெண் சம வாய்ப்புடன் வளர வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பு கிராமப்புறங்களில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவிகளுக்கும் கிடைக்க வேண்டும். இதற்கு ஏதுவாக தங்கள் பெற்றோர் விட்டு சென்ற சேமிப்பை வளர்த்து ஒரு சிறிய வைப்பு தொகையை வங்கியில் பிரயா பெயரில் நிறுவியுள்ளனர். இதன் முலம் பெறும் மாதாந்திர வட்டி தொகையில் பிரயாவின் திட்டங்களை தற்போது செயல்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளும் எண்ணங்களும் வரவேற்கப்படுகின்றன. உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம். உங்கள் விமர்சனங்கள் மற்றும் ஆக்கபூர்வமான பரிந்துரைகளுக்கு எங்கள் நன்றி. நாங்கள் உங்களிடம் தொடர்பு கொள்வோம்.