கிராமப்புறங்களில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு வளர்ந்து வரும் விஞ்சான மற்றும் வலை தல அறிவு மிகவும் முக்கியமானது. இன்றைய சூழ்நிலையில் நகர்ப்புற மாணவிகளை விட கிராமப்புற மாணவிகளுக்கு இந்த வாய்ப்பு குறைவு. நல்ல படிப்பு அதில் நாட்டம் மற்றும் திறமை கொண்ட மாணவிகளை படிப்பில் ஊக்கப்படுத்தினால் அது அவர்களின் முன்னேறும் வாய்ப்பை மேம்படுத்தும்.
பிரயா படிப்பில் நாட்டம் கொண்ட கிராம பள்ளி மாணவிகளுக்கு ஒரு சிறிய ஊக்க தொகையினை ஒவொரு மாதமும் வழங்க முன் வந்துள்ளது. இது 10, 11, மற்றும் 12 ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு உரியது. இது படிப்பில் ஊக்கத்தையும் சிறிய அளவு பொருளாதார தற்சார்பையும் ஏற்படுத்தலாம். மேலும் படிப்பு சாரா திறமைகளை வளர்க்கவும் இந்த சிறிய உதவி பயன்படலாம்.
இந்த உதவி திட்டம் தமிழக அரசு பள்ளிகள் அல்லது பஞ்சாயத்து பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு மட்டும் உரியது. அரசு பள்ளிகள் கிராமப்புறங்களில் அமைந்து இருக்க வேண்டும்.
விருப்பமுள்ள மாணவிகள் இந்த பிரயா இந்த உதவி திட்டம் தமிழக அரசு பள்ளிகள் அல்லது பஞ்சாயத்து பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு மட்டும் உரியது. அரசு பள்ளிகள் கிராமப்புறங்களில் அமைந்து இருக்க வேண்டும். விருப்பமுள்ள மாணவிகள் இந்த பிரயா இணையதளம் முலமாக விண்ணப்பம் அனுப்பலாம். தேர்நதெடுக்கபடும் மாணவிகளுக்கு ஒவொரு மாதமும் 500 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும். தற்போது 20 மாணவிகள் இந்த திட்டம் முலம் உதவி பெறலாம்.