தண்ணீரின் குண நலன்கள்

தண்ணீரின் குணம் அதனுடன் இணைந்து காணப்படும் பொருட்களின் தன்மையை பொறுத்து அமைகிறது. இது நீரின் பௌதீக தன்மை வேதியல் பொருட்கள் நீரில் வாழும் பாசி பாக்டீரியா மற்றும் நுண்மிகளின் அளவை கொண்டு நிர்ணயம் செய்யப்படுகின்றது. பொதுவாக மக்கள் தண்ணீரின் தரத்தை கொன்டே அதை எந்த தேவைக்கு பயன்படுத்தலாம் என்று முடிவு செய்கின்றனர். குடிப்பதற்கு நல்ல தண்ணீர் மிக குறைந்த உப்புக்களுடன் இருந்தால் நல்லது. சற்றே உப்பு அதிகமானால் அது துணி துவைப்பதற்கோ அல்லது தோட்டங்களுக்கோ பயன்படுத்தலாம்.

தண்ணீரின் தரத்தை அளவிட பௌதீக வேதியல் மற்றும் உயிரியல் பண்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த பண்புகளின் அளவீடுகளை கொன்டே தண்ணீரின் தரம் பல வித தேவைகளுக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த அளவீடுகள் இந்திய தர நிர்ணய கழகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நகர்ப்புற வளச்சியில் மாசுபடுதல் என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. நீர் நிலைகள் மாசுபடும் பொழுது அது நீரின் தரத்தை வெகுவாக பாதிக்கும். இதன் மூலம் அதன் உபயோகம் பெருமளவு குறைந்து விடும். மேலும் மக்களுக்கு வீட்டில் உபயோகப்படுத்தும் நீரின் தன்மை குறித்து சந்தேகங்கள் எழலாம். சில சமயம் நாம் உபயோகிக்கும் தண்ணீரின் தரம் குறித்து தெரிந்து கொள்ள விருப்பப்படலாம். இவ்வாறு சென்னை நகர மக்களின் நீரின் தரம் குறித்த சந்தேகங்களுக்கு உபயோகமான ஆலோசனைகளை பெறலாம்.
Water Quality Information
Click Here

Solve A Water Quality Problem?

Click Here

Analyze A Water Sample?
(personal use only)
Click Here