படிப்பு திட்டம்
கிராமப்புறங்களில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு வளர்ந்து வரும் விஞ்சான மற்றும் வலை தல அறிவு மிகவும் முக்கியமானது. இன்றைய சூழ்நிலையில் நகர்ப்புற மாணவிகளை விட கிராமப்புற மாணவிகளுக்கு இந்த வாய்ப்பு குறைவு. நல்ல படிப்பு அதில் நாட்டம் மற்றும் திறமை கொண்ட மாணவிகளை படிப்பில் ஊக்கப்படுத்தினால் அது அவர்களின் முன்னேறும் வாய்ப்பை மேம்படுத்தும்.
பிரயா படிப்பில் நாட்டம் கொண்ட கிராம பள்ளி மாணவிகளுக்கு ஒரு சிறிய ஊக்க தொகையினை ஒவ்வொரு மாதமும் வழங்க முன் வந்துள்ளது. இது 10, 11, மற்றும் 12 வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு உரியது. இது படிப்பில் ஊக்கத்தையும் சிறிய அளவு பொருளாதார தற்சார்பையும் ஏற்படுத்தலாம். மேலும் படிப்பு சாரா திறமைகளை வளர்க்கவும் இந்த சிறிய உதவி பயன்படலாம்.
இந்த உதவி திட்டம் தமிழக அரசு பள்ளிகள் அல்லது பஞ்சாயத்து பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு மட்டும் உரியது அரசு பள்ளிகள் கிராமப்புறங்களில் அமைந்து இருக்க வேண்டும் விருப்பமுள்ள மாணவிகள் இந்த பிரயா இணையதளம் முலமாக விண்ணப்பம் அனுப்பலாம். தேர்நதெடுக்கபடும் மாணவிகளுக்கு ஒவொரு மாதமும் 500 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும். தற்போது 20 மாணவிகள் இந்த திட்டம் முலம் உதவி பெறலாம்.
இப்பொழுது விண்ணப்பியுங்கள்
விதிமுறைகளும் நிபந்தனைகளும்
கலை விளையாட்டுகள் திட்டம்
விளையாட்டு கல்வியை போன்று இளமையில் முக்கியமானதாகும். தமிழ்நாட்டில் பல வகையான விளையாட்டுகள் கிராமப்புறங்களில் உண்டு. பல விளையாட்டுகள் தமிழ் மரபில் வீரம் சார்ந்தும் உண்டு. இது பிற்காலத்தில் பெண்களுக்கு தற்காப்பு முறைகளாகவும் உதவுகிறது. சிலம்பம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். கோயில் திருவிழாக்களும் காலை நிகழ்ச்சிகளும் கிராமிய வாழ்க்கையியல் விளையாட்டுகளை நன்கு வளர்த்து வந்தன. இவை ஊக்குவிக்கபட்டு அடுத்த தலைமுறையை சென்றடைய வேண்டும்.
பிரயா இந்த கலைகளையும் விளையாட்டுகளையும் ஊக்குவிக்க ஆர்வம் மிக்க இளம் பெண்களுக்கு ஒரு சிறிய ஊக்க தொகையினை வழங்க விரும்புகின்றது. பள்ளி மாணவிகள் அல்லது 16 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு இந்த உதவி தொகை வழங்கப்படும்.
ஏதாவது ஒரு கிராமிய காலை அல்லது விளையாட்டில் திறமை உடையவராக இருக்க வேண்டும். தாங்கள் பயிலும் பள்ளி அல்லது கிராமத்தில் உள்ள விளையாட்டு சங்கம் அல்லது கூட்டமைப்பு மூலமாக விண்ணப்பம் செய்யலாம். தேர்ந்தெடுக்கப்படும் பெண் குழந்தைகள் ஒவொரு மதமும் 500 ரூபாய் உதவி தொகை பெறுவர். இந்த திட்டத்தில் தற்போது 10 பெண்கள் உதவி பெறலாம்.