தொலை நோக்கம்
பிரயா கல்வி, விழிப்புணர்வு, சுய வளர்ச்சி மற்றும் பாலின சமத்துவம் ஆகியவற்றின் மூலம் பெண்களுக்கும் சுற்றுச்சூழல் சார்புக்கும் இடையிலான நல்லிணக்கத்தை ஊக்குவிக்க முயற்சிக்கிறது.
வழி முறைகள்
பின்தங்கிய பிராந்தியங்களில் உள்ள சிறுமிகளின் சுய வளர்ச்சிக்காக கல்வித் திறமைகளை அங்கீகரித்தல், கிராமப்புற விளையாட்டு, உள்ளூர் கலாச்சாரம் மற்றும் கலைகளைத் வளர்க்க திட்டங்களை உருவாக்குதல்.
நீர்வாழ் பன்முகத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை குறித்து ஆய்வு செய்யும் பள்ளி மற்றும் இளங்கலை பயிலும் மாணவிகளின் சிறிய திட்டங்களை ஆதரித்தல்
விரிவுரைகள், சிறப்பு பேச்சுக்கள், பரப்புதல், பல்லுயிர், நீர் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய வரலாற்று தகவல்களை ஆவணப்படுத்துதல் மற்றும் வலைதள தகவல் அமைப்புகளை ஆதரித்தல்
தோற்றம்
பிரயா உறுப்பினர்களுக்கு நல்ல கல்வி, நல்ல குடும்ப சூழ்நிலை மற்றும் ஆன் பெண் சம வாய்ப்புடன் வளர வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பு கிராமப்புறங்களில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவிகளுக்கும் கிடைக்க வேண்டும்.
இதற்கு ஏதுவாக தங்கள் பெற்றோர் விட்டு சென்ற சேமிப்பை வளர்த்து ஒரு சிறிய வைப்பு தொகையை வங்கியில் பிரயா பெயரில் நிறுவியுள்ளனர். இதன் முலம் பெறும் மாதாந்திர வட்டி தொகையில் பிரயாவின் திட்டங்களை தற்போது செயல்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
பிராயவின் நோக்கங்கள்
கிராமப்புற மாணவிகளின் படிப்பு மற்றும் விளையாட்டு திறனை ஊக்குவிக்க சிறிய உதவித்திட்டங்களை ஏற்படுத்துதல்.
நீர் அதன் தரம் பல்லூயுர் வளர்ச்சி பரவல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான புள்ளி விவர அறிக்கைகளை வலை தளங்கள் மூலம் பரப்புதல்.