மலை வாழ் மக்கள் இயற்கை சார்ந்த பல மருத்துவ முறைகளை பின் பற்றி வழகின்றனர். அவர்களுடன் பழகும் போது நாமும் தெரியாத பல நூற்றாண்டு பழமையான மருந்துகள் மற்றும் மருத்துவ முறைகள் பற்றி தெரிய வரலாம். இது புதிய மருந்துகள் கண்டுபிடிப்புக்கு கூட உதவலாம். தமிழ் நாட்டில் உள்ள ஜவ்வாது மலை வாழ் மக்களிடம் நடத்தப்பட்ட ஒரு சமுதாய ஆய்வில் கண்டறிந்த சில செய்திகளை இங்கே காணலாம் .