சென்னை நிலத்தடி நீர்

நிலத்தடி நீர் பெரும்பாலான சென்னை நகர மக்களின் வீடு உபயோக தேவைகளை பூர்த்தி செய்கிறது. சென்னை புறநகர் இன்று மக்கள் தொகை பெருக்கத்துடன் பல அடுக்கு மாடி குடியிருப்புகளுடன் வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் விளைவாக குடி நீர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துகொன்டே போகிறது. மழை பொழிவில் ஆண்டுக்கு ஆண்டு மாற்றம் அதிகரிப்பதால் தற்போதுள்ள குடி நீர் தேக்கங்களால் சென்னை நகர மக்களின் தேவையை பூர்த்தி செய்யமுடியவில்லை. இதனால் மக்கள் மேலும் மேலும் ஆழ் துளை கிணறுகளை தோண்டி கிணற்று நீரை உறிஞ்சுகின்றனர். சென்னை நகர நிலத்தடி நீர் மட்டம் பல ஆண்டுகளாக கீழயே சென்றுகொண்டு இருக்கிறது. ஆழ் துளை கிறுகளில் இருந்து பெறும் நீரின் அளவு குறைவதோடு அதன் உப்பு தன்மையும் அதிகரித்து வருகிறது.

சென்னை நகர நிலத்தடி நீர் பற்றிய புள்ளி விவரங்கள் மற்ற துறைகளுடன் (விவசாயம், மருத்துவம், கால நிலை) ஒப்பிட்டால் மிக மிக குறைவு. இப்போது உள்ள வளர்ந்த தொழில் நுட்ப அறிவு நீர் நிலைகளை பற்றிய நுணுக்கமான புள்ளி விவரங்களை சேகரிக்க உதவும். ஏனினும் தற்போதைய விவரங்கள் போதுமானதாக இல்லை. இதுவரை கிடைத்த புள்ளி விவரங்கள் பொதுமக்கள் கவனத்திற்கு இங்கு வெளியிடப்படும்.