பிரயா ஒரு சிறிய தொண்டு நிறுவனம். பெண் மாணவிகளின் சேவைக்காக 2017ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. நீர் நிலைகளும் சுற்று சூழலும் நம் கிராமிய வாழ்வில் பின்னி பிணைந்தவை. பெண்கள் மற்றும் சிறுமிகளின் வளர்ச்சியில் இவை இரண்டும் முக்கிய பங்கு வகிக்கின்றன. படிப்பு, விளையாட்டு சுற்று சூழல் பற்றி நன்கு அறிந்திருந்தால் வளர்ந்து வரும் பெண்களின் எதிர்கால வாழ்வை அது வளப்படுத்தலாம். பிரயாவின் நோக்கமும் திட்டங்களும் இதை சார்ந்தே உருவாக்கப்பட்டுள்ளது.
பிரயா உறுப்பினர்களுக்கு நல்ல கல்வி, நல்ல குடும்ப சூழ்நிலை மற்றும் ஆன் பெண் சம வாய்ப்புடன் வளர வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பு கிராமப்புறங்களில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவிகளுக்கும் கிடைக்க வேண்டும். இதற்கு ஏதுவாக தங்கள் பெற்றோர் விட்டு சென்ற சேமிப்பை வளர்த்து ஒரு சிறிய வைப்பு தொகையை வங்கியில் பிரயா பெயரில் நிறுவியுள்ளனர். இதன் முலம் பெறும் மாதாந்திர வட்டி தொகையில் பிரயாவின் திட்டங்களை தற்போது செயல்படுத்த ஆரம்பித்துள்ளனர்.